spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉயர்கல்வித்துறை பற்றி ஆளுநர் கூறியது தவறான தகவல்- பொன்முடி

உயர்கல்வித்துறை பற்றி ஆளுநர் கூறியது தவறான தகவல்- பொன்முடி

-

- Advertisement -

உயர்கல்வித்துறை பற்றி ஆளுநர் கூறியது தவறான தகவல்- பொன்முடி

உயர்கல்வித்துறை பற்றி தவறான தகவலை ஆளுநர் தெரிவித்துவருவதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Image

பொறியியல் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “சென்னை பல்கலைக்கழகம் 10வது இடத்தில் இருந்து 100-வது இடத்துக்குச் சென்றதாக ஆளுநர் கூறியது தவறான தகவல். சர்வதேச அளவில் 547-வது இடத்திலும், இந்திய அளவில் 12-வது இடத்திலும் சென்னை பல்கலைக்கழகம் உள்ளது. நாட்டில் உள்ள கல்லூரிகளில் சென்னை மாநிலக் கல்லூரி 3-வது இடத்தில் உள்ளது.

we-r-hiring

இந்தியாவில் 53% மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர தமிழ்நாட்டையே தேர்வு செய்கின்றனர். கலாவதியான கொள்கை சனாதனம்தான், திராவிட மாடல் அல்ல. அரசியலுக்கு அப்பாற்பட்டு நிர்வாகத்தை நடத்துபவராகத் தான் ஆளுநர் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமே இருக்கக்கூடிய திராவிட கொள்கை இனி இந்தியா முழுவதும் பரவும். திராவிடம் காலாவதியான கொள்கை அல்ல. ” என விளக்கம் அளித்தார்.

MUST READ