- Advertisement -
தமிழ்நாட்டின் ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும் என எம்.பி.களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.மேலும், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைத்தளப்பதிவில், ”மக்களின் உரிமைகள், மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய பாஜக அரசு 11 ஆண்டுகளாக நசுக்கி பறித்து வருகிறது. எங்கும், எதிலும் இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பது, மதவாதத்தை வளர்ப்பது என பாஜக ஆட்சி செய்து வருகிறது. நிதியுரிமை, மொழியுரிமை, கல்வியுரிமை, கூட்டாட்சி உரிமை ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும்” என எம்.பி.க்களுக்கு முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார்.