
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார் அமைச்சர் பொன்முடி.

“ஊழலுக்காகக் கலைக்கப்பட்டது தி.மு.க. அரசு”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
கடந்த ஜூலை 17- ஆம் தேதி அன்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்.பி.யுமான ஆகியோரின் வீடுகள், மருத்துவமனை, அலுவலகங்கள் என 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். சோதனையில் சுமார் 81.7 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்துள்ளதாகவும், வங்கியில் இருந்த 41.90 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர் பொன்முடி மற்றும் எம்.பி. கௌதம சிகாமணி ஆகியோரை அலுவலகத்துக்கு வரவழைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்ற பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூலை 18) இரவு சென்னைக்கு திரும்பினார். இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்துப் பேசினார்.
“அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூபாய் 95 லட்சம் பறிமுதல்”- அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
இந்த சந்திப்பின் போது, அமலாக்கத்துறையின் விசாரணைக் குறித்தும், அவர்கள் எழுப்பிய கேள்விக்கு அளிக்கப்பட்ட விளக்கங்கள் குறித்தும் முதலமைச்சரிடம் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.