Homeசெய்திகள்தமிழ்நாடு"அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூபாய் 95 லட்சம் பறிமுதல்"- அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

“அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூபாய் 95 லட்சம் பறிமுதல்”- அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

-

 

"அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூபாய் 95 லட்சம் பறிமுதல்"- அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
File Photo

அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத சுமார் 95 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

“புதிய இந்தியா உருவாகும் ஆண்டாக 2024 அமையும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் திங்கள்கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல், அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான கௌதம சிகாமணிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வீடுகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, கல்வி அறக்கட்டளைகள் என 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தியிருந்தனர்.

பொன்முடி கனிமவளத்துறை அமைச்சராக இருந்த போது, அவரது மகன் மற்றும் உறவினர்கள் பினாமிகளுக்கு ஐந்து இடங்களில் செம்மண் குவாரிகளுக்கு உரிமம் வழங்கியுள்ள புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான குவாரிகள் மூலம் கிடைத்த வருமானம், பினாமிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட்ட இரண்டு நிறுவனங்களை பொன்முடி தரப்பினர் வாங்கியுள்ளனர். குறிப்பாக, இந்தோனேசியா நிறுவனம், 41.57 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலையில், அந்த நிறுவனம் கடந்த 2022- ஆம் ஆண்டு 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்த விவகாரத்தில் ஹவாலா பணம் கைமாறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 81.70 லட்சம் ரூபாய், 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 41.90 கோடி ரூபாய் மதிப்புள்ள வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

MUST READ