சென்னை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக் என்பவரது வீடு உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று (ஜூன் 13) காலை 09.00 மணி முதல் மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் அதிரடியாக சோதனை நடத்தி வந்தனர். மேலும், சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது அமலாக்கத்துறை!
இந்த நிலையில், சோதனை அனைத்தும் முடிவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை விசாரணைக்காக இன்று (ஜூன் 14) காலை 06.00 மணியளவில் காரில் அழைத்துச் சென்றனர்.
அப்போது, அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை ஓமந்தூரார் அரசுப் பன்னோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்தி, மிரட்ட விரும்புகிறார்களா?- மு.க.ஸ்டாலின்
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் மத்திய துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜி கைதானதை அடுத்து கரூரில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 500- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கரூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.