Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வரின் அழுத்தத்தால் நிலக்கரி சுரங்க திட்டம் ரத்து - தங்கம் தென்னரசு

முதல்வரின் அழுத்தத்தால் நிலக்கரி சுரங்க திட்டம் ரத்து – தங்கம் தென்னரசு

-

முதல்வரின் அழுத்தத்தால் நிலக்கரி சுரங்க திட்டம் ரத்து – தங்கம் தென்னரசு

நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததற்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தங்கம் தென்னரசு

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “முதலமைச்சரின் அழுத்தம் காரணமகவே நிலக்கரி சுரங்க ஏலத்தில் டெல்டா பகுதியை மத்திய அரசு நீக்கியது. நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததற்கு கிடைத்த வெற்றி. மத்திய அரசுக்கு தமிழ்நாடு மக்கள் மீதும், டெல்டா மீதும் இன்றாவது அக்கறை வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது” எனக் கூறினார்.

தொடர்ந்து இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்ற முதலமைச்சரின் உறுதியான நிலைபாட்டால் ஒன்றிய அரசு அத்திட்டத்தையே கைவிட்டுள்ளது. இது டெல்டாக்காரராக முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ