spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவீட்டு வசதி இல்லாதவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தருவது அரசின் தலையாய கடமையாகும் - மு.க.ஸ்டாலின் பேச்சு!

வீட்டு வசதி இல்லாதவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தருவது அரசின் தலையாய கடமையாகும் – மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

- Advertisement -

வீட்டு வசதி இல்லாதவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தருவது அரசின் தலையாய கடமையாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 14 மாவட்ட ஆட்சியர்களூடன் ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளார்.

we-r-hiring

சென்னை உட்பட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதில் பேசிய அவர் ஆலோசனை கூட்டத்தில், வீட்டுவசதி இல்லாதவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தருவது அரசின் தலையாய கடமையாகும். மேலும் மகளிர் உரிமைத் தொகை, காலை சிற்றுண்டி உள்ளிட்ட அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுற்றதும் மக்களுக்கான சமூகநலத் திட்டங்களைச் செம்மைப்படுத்தும் ஆய்வுப் பணிகள் தொடங்கியது. உங்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள நமது #DravidianModel ஆட்சியில் தொடர்ந்து இன்னும் பல புதிய திட்டங்களைக் கொண்டுவரவுள்ளோம். நமது எண்ணங்களோடு, மாவட்ட ஆட்சியர்களின் உள்ளீடுகளையும் பெற்றுக் கொண்டோம். தமிழ்நாடு சிறக்க எல்லோரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

MUST READ