Homeசெய்திகள்தமிழ்நாடுஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளும் ஓர் அங்கம் என்பதை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும்...

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளும் ஓர் அங்கம் என்பதை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும் – மு.க.ஸ்டாலின்

-

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளும் ஓர் அங்கம் என்பதை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று காலை டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். ஆனால் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மம்தா பானர்ஜி அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, “மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு 10-20 நிமிடங்கள் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் தனக்கு 5 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டு, தன்னுடைய மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது. மேலும் கூட்டத்தில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பாரபட்சம் காட்டக்கூடாது என மம்தா பானர்ஜி கூறினார்.

 

இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜிக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஒரு மாநிலத்தின் முதல்வரை நடத்தும் விதமா இது? ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளும் ஓர் அங்கம் என்பதை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும். கூட்டாட்சியில், அனைவரது கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

MUST READ