spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅயோத்திதாசர் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கி திண்ணமாக நடைபோட உறுதியேற்போம் - மு.க.ஸ்டாலின்!

அயோத்திதாசர் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கி திண்ணமாக நடைபோட உறுதியேற்போம் – மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

அயோத்திதாசர் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கி திண்ணமாக நடைபோட உறுதியேற்போம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், தமிழன், திராவிடன் என்னும் இரு சொற்களை அரசியல் களத்தில் அடையாளங்களாக மாற்றியவர் அயோத்திதாச பண்டிதர். 1893 ஆம் ஆண்டு இவர் திராவிட மகாஜன சபை என்பதை நிறுவினார். அத்துடன் ஒரு பைசா தமிழன் என்ற இதழைத் தொடங்கி அதையே தமிழன் என்ற இதழாக 1907 ஆம் ஆண்டு நடத்திவந்தார். எழுத்தாளர், ஆய்வாளர் ,வரலாற்று ஆசிரியர் ,மானுடவியல் சிந்தனையாளர், பதிப்பாளர், பத்திரிக்கையாளர் ,மருத்துவர், பேச்சாளர், மொழியியல் வல்லுனர், பன்மொழிப்புலவர் ,புதிய கோட்பாட்டாளர் ,சிறந்த செயல்பாட்டாளர் ,சளைக்காத போராளி என பன்முக ஆற்றல் கொண்ட இவர் பூர்வீக சாதி பேதமற்றவர்கள் திராவிடர்கள் என்று உரக்க கூறினார்.

தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்! முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்! எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ