“ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள்” ஈபிஎஸ் புகாருக்கு முதலமைச்சர் பதிலடி
டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தேர்வு விவகாரத்தில் மிகப்பெரிய தவறு, ஊழல் நடைபெற்று இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வில் ஊழல்கள் நடைபெற்று இருப்பதாக எவ்வித ஆதாரமும் இன்றி எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எதிக்கட்சி தலைவர் பேசிய சொற்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியிடம் ஆதாரம் இருந்தால் இந்த அவையிலேயே நிரூபிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக குரூப் -4 தேர்வு குறித்து பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது தென்காசியில் ஒரு தனியார் மையத்தில் பயிற்சி பெற்ற 2,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், இது தேர்வு எழுதியவர்களிடம் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறினார். விசாரணை நடத்தி தவறு ஏதேனும் நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.