ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார்.


அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “20 மாதங்களை கடந்துள்ளது திமுக அரசு, அதற்குள் இமாலய சாதனைகளை செய்துள்ளோம். காலம் குறைவு, ஆனால் ஆற்றியுள்ள பணிகள் அதிகம். மக்களின் நலன் மட்டுமே நமது சிந்தனையில் நின்றது. அதுவே மக்கள் மனதை வென்றது. தமிழ்நாட்டில் வீரத்துடனும், விவேகத்துடனும் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுவருகிறது.திராவிட மாடல் கொள்கையை உருவாக்கி அதன் அடிப்படையில் திமுக ஆட்சி செயல்பட்டுவருகிறது. திராவிட மாடல் ஆட்சி வெற்றி பெற்றுவருகிறது. தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்.
மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காக்கவும் ஆட்சியின் வலிமையை உணர்த்தவும் எனது சக்தியை மீறி செயல்படுவேன். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமின்றி சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் பன்முக கூறுகை விளக்கில் தமிழ்நாடு அரசு எந்த வகையில் செயல்படுகிறது என ஆளுநர் பாராட்டி பேசினார். நொடிக்கு நொடி உழைத்துவருகின்றேன். கடந்த ஆண்டில் 9,000 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். கடந்த ஓராண்டில் 655 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.
கலைஞரிடம் நான் கற்றுக்கொண்ட பாடம் என்னை உழைக்க தூண்டுகிறது. இரவு தூக்கம் மட்டுமே எனது ஓய்வு நேரமாக இருக்கிறது. ஒரு கோடிக்கு மேல் தனிப்பட்ட முறையில் உதவிகள் செய்து கொடுத்துள்ளேன். தமிழ்நாட்டில் ரூ.2ம்57,850 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்றுவருகின்றன. 10 ஆண்டுகளாக தேங்கி கிடந்த தமிழ்நாட்டை முன்னோக்கி ஓடவிட்டிருக்கிறேன். என்னால் சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் 67” எனக் கூறினார்.
