spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் - முதல்வர் ஸ்டாலின்

பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் – முதல்வர் ஸ்டாலின்

-

- Advertisement -

பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் – முதல்வர் ஸ்டாலின்

வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

jallikkattu

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசனம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் செல்லுபடி ஆகும் என்றும், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரங்களில் ஒரு பகுதி என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் அரசியல் சாசன பிரிவு 14 மற்றும் 21 ஆகியவை அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

we-r-hiring

இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது! தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்” என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சை நாயகனாக திகழ்வதாக அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடை இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்பின் மூலம் தமிழர்களின் குறிப்பாக தென்மாவட்ட மக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு துணை நின்ற அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்” என பதிவிட்டுள்ளார்.

MUST READ