spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

-

- Advertisement -

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக தேசிய அளவிலான நிபுணர் குழுவை அமைக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றம்

we-r-hiring

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க உத்தரவிடக் கோரி கேரளாவை சேர்ந்த நபர் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கடந்த 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைப்பெரியாறு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்ததாகவும், அணையின் பாதுகாப்பு குறித்து அந்த குழு தொடர்ந்து ஆய்வு செய்து வந்ததாகவும்  கூறினார். 2021ஆம் ஆண்டு தேசிய அணை பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். அப்போது, கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அணை பாதுகாப்பு சட்டப்படி மத்திய அரசு புதிய கண்காணிப்பு குழுவை இன்னும் அமைக்கவில்லை என்று தெரிவித்தார்.

முல்லைப்பெரியாறு

அப்போது நீதிபதிகள், முல்லைப் பெரியாறு வழக்கில் அணை பாதுகாப்பு சட்டத்தில் கூறியுள்ளபடி நிபுணர்கள் குழுவை, மத்திய அரசு ஏன் இதுவரை அமைக்கவில்லை? என்றும், அணையின் கட்டமைப்பு ரீதியான ஆய்வு கடைசியாக எப்போது மேற்கொள்ளப்பட்டது? என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும், அணையின் உரிமையாளர் என்கிற நிலையில் தமிழ்நாடு அரசே ஏன் தனியாக ஒரு நிபுணர் குழுவை அமைக்க கூடாது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழ்நாடு அரசு குழு அமைக்க தயாராக உள்ளதாகவும், இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி குறிப்பிட்டார. மேலும், நாளை மறுநாள் கூட உள்ள அணை பாதுகாப்பு ஆணையம் தொடர்பான கூட்டத்தில் இது குறித்து வலியுறுத்த உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தேசிய அணை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதிலும் தேசிய குழு அமைப்பதிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசும் மற்றும் தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

 

MUST READ