Homeசெய்திகள்தமிழ்நாடுநாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடுகள்... துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!

நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடுகள்… துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!

-

- Advertisement -
kadalkanni

நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா வரும் டிசம்பர் 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதனையொட்டி தர்காவில் தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று நாகூர் தர்காவில் கந்தூரி விழா முன்னேற்பாடு பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

முன்னதாக துணை முதலமைச்சருக்கு, தர்கா நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், நாகூர் கந்தூரி திருவிழாவிற்கு தமிழக அரசு சார்பில் 45 கிலோ சந்தன கட்டை வழங்கப்பட்டதற்கு தர்கா நிர்வாகிகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது சிறுபான்மையினர் துறை அமைச்சர் ஆவடி நாசர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்,  நாகூர் தர்கா நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாகூர் தர்காவில் வரும் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளதால் தற்போது அமைச்சருடன் இங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளதால் நாகூர் தர்கா பகுதிக்கு வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் அதிக யாத்திரையாளர்கள் வரவுள்ளதால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டு உள்ளதாகவும் துணை முதலமைச்சர் கூறினார்

நாகூர் வருகை புரியக்கூடிய பொதுமக்களுக்கு தங்கும் வசதிகள் தொடர்பாகவும் 500 மீட்டர் இடைவெளியில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தரும்படியும் ஆய்வு மேற்கொண்டு அறிவுறுத்தி உள்ளதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். மேலும் நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 45 கிலோ சந்தன கட்டைகளை வழங்கியுள்ளதாகவும், இதற்காக தர்கா நிர்வாகிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

MUST READ