நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே ரயில்வே பீடர் சாலையைச் சேர்ந்த மதன் என்பவருக்கும், பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி என்பவருக்கும் நேற்று ரெட்டியார்பட்டி சாலை அருகே அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த சம்பவமானது பெண் வீட்டார்களுக்கு தெரிய வரவே சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து கண்ணாடிகள் மற்றும் நாற்காலிகளை உடைத்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்ட சாதி சங்கத்தை சிலர் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் பட்டியலின இளைஞரும், வேறு சமூக பெண்ணும் காதலிப்பதாக மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் தஞ்சமடைந்தது குறிப்பிடதக்கது. இதனையடுத்து அந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.