spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகருங்குழி – பூஞ்சேரி இடையே புதிய சாலை திட்டம் – தமிழ்நாடு அரசு

கருங்குழி – பூஞ்சேரி இடையே புதிய சாலை திட்டம் – தமிழ்நாடு அரசு

-

- Advertisement -

சென்னை – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்  கருங்குழி – பூஞ்சேரி இடையில் உள்ள 32 கி.மீட்டருக்கு புதிய சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.கருங்குழி – பூஞ்சேரி இடையே புதிய சாலை திட்டம் – தமிழ்நாடு அரசு

சென்னை – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நெடுஞ்சாலையாக உள்ளது. செங்கல்பட்டு – திண்டிவனம் சாலையில் தினசரி 65,000 கார்களும், தாம்பரம் – திண்டிவனம் சாலையில் ஒரு லட்சம் கார்களும் கடந்து செல்கின்றன. நாளுக்கு நாள் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் இதற்கு மாற்றாக வேறு சாலையை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, கருங்குழி – பூஞ்சேரி இடையில் உள்ள 32 கி.மீட்டருக்கு புதிய சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.  செங்கல்பட்டுக்கு முன்பாக ஜி.எஸ்.டி சாலையில் மதுராந்தகம் பகுதியில் உள்ள கருங்குழியில் இருந்து ஈசிஆர் பூஞ்சேரி வழியாக புதிய சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

we-r-hiring

இதனைத் தொடர்ந்து இந்த திட்டம் தொடர்பாக விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார்  செய்து அளிக்க வேண்டும் தமிழ்நாடு நெடுஞ்சாலை தறை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு ஆணையத்திடம் கோரிக்கை வைத்து இருந்தது,   இந்த கோரிக்கையின்  தொடர்பான விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.  சுமார் 80 லட்சம் செலவில் இந்த விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது. இந்த புதிய சாலை மூலம் ஈ சி ஆர் சாலையில் போக்குவரத்து திருப்பி விட பட்டால் மதுராந்தகம் முதல் தாம்பரம் இடையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

மருத்துவ இடங்களில் தமிழ்நாடு பின்னோக்கி வர பாஜக அரசே காரணம் – மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

MUST READ