spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமருத்துவ இடங்களில் தமிழ்நாடு பின்னோக்கி வர பாஜக அரசே காரணம் - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

மருத்துவ இடங்களில் தமிழ்நாடு பின்னோக்கி வர பாஜக அரசே காரணம் – மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

-

- Advertisement -

மருத்துவ இடங்களில் தமிழ்நாடு பின்னோக்கி உள்ளதென முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனின் விமர்சனத்திற்கு, பின்னடைவுக்கான காரணமே ஒன்றிய பாஜக அரசுதான் என்றும் முடிந்தால், ஒன்றிய அரசிடம் பேசி, தமிழகத்திற்கு முன்னேற்றம் ஏற்பட தமிழிசை உறுதுணையாக இருக்கட்டும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.மருத்துவ இடங்களில் தமிழ்நாடு பின்னோக்கி வர பாஜக அரசே காரணம் - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

சென்னை நந்தனம் கலைக் கல்லூரியில் நான்கு புள்ளி ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10, 760 சதுரடியில் கட்டப்பட்டு வரும் குளிர்சாதன அரங்கப் பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவிலான அரங்கத்துக்கான கட்டுமானப் பணிகள், இம்மாத இறுதியில் நிறைவடைய உள்ளதாக கூறினார். 2553 மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கு 24 ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு மெரிட் அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

we-r-hiring

கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்ட பிறகு, கூடுதல் மதிப்பெண்கள் வழங்கி, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் விரைவில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

மருத்துவ இடங்களில் தமிழ்நாடு பின்னோக்கி உள்ளதென்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் விமர்சனம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அப்படி தமிழ்நாடு பின்னுக்கு வர, ஒன்றிய பாஜக அரசே காரணம் என மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டினார்.  தமிழகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என தமிழிசை விரும்பினால், அவர் சார்ந்துள்ள பாஜகவின் தலைமையிடம் பேசி, நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, தமிழகத்தின் மயிலாடுதுறை, காஞ்சிபுரம், தென்காசி, பெரம்பலூர், ராணிப்பட்டி ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு மருத்துவ கல்லூரி வேண்டுமென்ற கோரிக்கையை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மேலும் தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகளுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்குவது குறித்தும் தமிழகத்தில் நர்சிங் கல்லூரி அமைப்பது பற்றி பேசுவதற்காகவும் ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு சந்திக்க நேரம் கொடுக்கப்படும் என நட்டா தரப்பில் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சன்னியாசி குண்டு ஊராட்சியை சேலம் மாநகராட்சியுடன் இணைக்க – ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு

MUST READ