spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபழனியில் பழைய ரயிலுக்கு பதிலாக புதிய ரயில்

பழனியில் பழைய ரயிலுக்கு பதிலாக புதிய ரயில்

-

- Advertisement -
பழனியில் பழைய ரயிலுக்கு பதிலாக புதிய ரயில்
பழனியில் பழைய ரயிலுக்கு பதிலாக புதிய நவீன இழுவை ரயிலை பொறுத்தும் பணி தொடங்கியுள்ளது.

பழனியில் பழைய ரயிலுக்கு பதிலாக புதிய ரயில்

தமிழகத்தில் பக்தர்கள் அதிகம் வரும் கோயிகளில் முதன்மையானது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில். பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல படிக்கட்டு பாதையுடன் மலையின் மேற்கு பகுதியில் இழுவை ரயில் வசதியும், தெற்கு பகுதியில் ரோப் கார் வசதியும் உள்ளன.

we-r-hiring

மூன்று இழுவை ரயில்களில் ஒரே நேரத்தில் 104 பேர் பயணம் செய்யமுடியும். இந்நிலையில் புதிய நவீன இழுவை ரயிலை அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் நன்கொடையாக வழங்கியுள்ளார். ரூ .75 லட்சம் மதிப்பீட்டில் 72 பேர் பயணம் செய்யும் வகையில் இந்த இழுவை ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.

பழனியில் பழைய ரயிலுக்கு பதிலாக புதிய ரயில்

இந்த புதிய இழுவை ரயிலை தண்டவாளத்தில் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு நிபுணர்குழுவின் ஒப்புதலுக்கு பிறகு புதிய இழுவை ரயில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

MUST READ