Homeசெய்திகள்தமிழ்நாடுநீலகிரி நிலச்சரிவு - பொதுமக்களை தற்காலிக முகாம்களில் தங்கவைக்க ஏற்பாடு

நீலகிரி நிலச்சரிவு – பொதுமக்களை தற்காலிக முகாம்களில் தங்கவைக்க ஏற்பாடு

-

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்காலிக முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக கூடலூர் பகுதியில் உள்ள கோக்கால் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்தன. இந்த நிலையில் கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால் நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் புவியியல் துறையை சேர்ந்த வல்லுனர்கள் அறிவுறுத்தலின் படி கோக்கால் கிராமத்தில் வாசிக்கும் மக்களை தற்காலிக முகாம்களில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலத்தில் கால்வாய்க்குள் விழுந்த இளைஞரால் பரபரப்பு

அவ்வாறு தற்காலிக முகாம்களில் தங்க விருப்பம் தெரிவிக்காதபட்சத்தில் நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்ப்பட்டால் உடனடியாக வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டு உள்ளது. இதன்படி, கிராம நிர்வாக அலுவலர், கூடலூர் – 9385243552, வருவாய் ஆய்வாளர், கூடலூர் – 8610588152, வருவாய் வட்டாட்சியர், கூடலூர் – 9445000557, வருவாய் கோட்டாட்சியர், கூடலூர் – 9445000437 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

MUST READ