spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு!

நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு!

-

- Advertisement -

 

we-r-hiring

மாணவிகளைத் தவறாக வழி நடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீ வில்லிப்புத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

100 நாட்களைக் கடந்த ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்றதாக கடந்த 2018- ஆம் ஆண்டு வழக்குப்பதிவுச் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி பகவதி அம்மாள் இன்று (ஏப்ரல் 29) தீர்ப்பளித்தார். அதில், நிர்மலா தேவி குற்றவாளி என்றும், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘ரசவாதி’….. ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

இன்று (ஏப்ரல் 29) தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ