spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுடி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுகளில் 213 கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுகளில் 213 கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

-

- Advertisement -

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளில் 213 கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த காலிப் பணியிடங்கள் 2540 ஆக அதிகரித்துள்ளது.

6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதியவா்களின் எதிர்காலம் என்னவாகும் – அறிவிப்பை வெளியிடுமா டி.என்.பி.எஸ்.சி ?

we-r-hiring

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 2ஆம் நிலை பணியிடங்கள் உள்ளிட்ட 2,327 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல் நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது.இதில் நேர்முகத் தேர்வு அடங்கிய 507 பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத 1,820 பணியிடங்களும் அடங்கும்.

குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கு 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், 5.81 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இந்த நிலையில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் 213 கூடுதல் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி இன்று வெளிட்டுள்ளது.
இதன் மூலம் மொத்த காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து, 540 ஆக அதிகரிப்பட்டுள்ளது.

MUST READ