Homeசெய்திகள்தமிழ்நாடு"சின்னத்துக்கு இல்ல, சீமானுக்கே ஓட்டு"- சீமான் பேட்டி

“சின்னத்துக்கு இல்ல, சீமானுக்கே ஓட்டு”- சீமான் பேட்டி

-

சின்னத்துக்கு இல்ல, சீமானுக்கே ஓட்டு என நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

கடந்த தேர்தல்களில் சீமானின் நாம் தமிழர் கட்சி ‘கரும்பு விவசாயி’ சின்னத்தில் போட்டியிட்டது. இந்த நிலையில், உரிய நேரத்தில் ‘கரும்பு விவசாயி’ சின்னத்தைக் கோரி நாம் தமிழர் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கவில்லை. இதன் காரணமாக, அந்த சின்னம் வேறொரு கட்சிக்கு ஒதுக்கியது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம். முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாக விளக்கம் அளித்துள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்தது. இந்த நிலையில் தங்களுக்கு படகு அல்லது பாய்மர படகு சின்னம் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளதாவது, “நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு. சீமானுக்குத்தான் ஓட்டு, சின்னத்துக்கு இல்லை. கரும்பு விவசாயி சின்னத்துக்காகக் கடைசி வரை போராடினோம். சின்னத்தில்தான் விவசாயியா..? நான் நிஜத்திலேயே விவசாயிதான். பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் எங்களுக்குக் கிடைத்திருக்கும். ஆனால் என் வாழ்நாளில் சமரசத்துக்கு இடமில்லை . நாளை முதல் தேர்தல் பரப்புரை தொடங்க உள்ளோம். சின்னத்துக்கு இல்ல, சீமானுக்கே ஓட்டு என நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

MUST READ