பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் சிறப்புச் சேவை மையம் தான் “ஒன் ஸ்டாப் சென்டர்” அல்லது தமிழ்நாட்டில் இது “சகி” மையம் என அழைக்கப்படுகிறது.பெண்களுக்கு வீட்டிலும், வெளியிலும் ஏற்படும் வன்கொடுமைகளை தடுத்து சுதந்திரமான சூழலை உருவாக்க மாவட்டம் தோறும் தனிச்சிறப்பு சேவை மையமான ஒன் ஸ்டாப் சென்டர்கள் செயல்பட்டுகின்றன. தமிழ்நாட்டில், ஒன் ஸ்டாப் மையம் “சகி” (SAKHI) என்ற பெயரில் செயல்படுகிறது. வீடு,பணி செய்யும் இடம் என எந்த இடமாக இருந்தாலும் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுபர்களுக்கு சட்ட உதவி, உளவியல் ஆலோசனை என பல உதவிகள் வழங்கப்படுகிறது.
குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை, பெண் குழந்தைகள் மீதான வன்முறை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருமான ஒருங்கிணைந்த ஆதரவையும், உதவியையும் வழங்குவதே இந்த மையத்தின் முக்கிய நோக்கம்.

தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் – (8098822551) , கட்டணமில்லா தொலைபேசி எண் – 181-ல் தொடர்புகொள்ளாம். மேலும், ஒன் ஸ்டாப் மையத்தைத் தொடர்பு கொள்ள, நீங்கள் சமூக நலத்துறை அல்லது காவல்துறை மூலம் தகவல்களைப் பெறலாம்.
ஒன் ஸ்டாப் சென்டர்களில் வழங்கப்படும் சேவைகள், இந்த சென்டர் மூலமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவசரகால உதவி மற்றும் மீட்பு செவைகள், மருத்துவ உதவி, முதல் தகவல் அறிக்கை மற்றும் வன்முறை நடைப்பெற்ற அறிக்கையை பதிவு செய்திட உதவி, உளவியல் – சமூக ஆதரவு /ஆற்றுப்படுத்துதல், சட்ட உதவி மற்றும் ஆலோசனை , தங்குமிடம், இணைய வழி காணொலி காட்சி ஆகியன வழங்கப்படுகின்றன பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் இக்காலத்தில் இந்த சேவை குறித்த விழிப்புணர்வு அவசியமாகிறது.