spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ஒருவாரத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும்"- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

“ஒருவாரத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

-

- Advertisement -

 

"ஒருவாரத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும்"- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
Video Crop Image

கனமழை, வெள்ளப் பாதிப்புகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 6,000 ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கும் பணி ஒருவாரத்தில் தொடங்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். எதிர்க்கட்சிகள் என்றாலே வெள்ளை அறிக்கை கேட்பது வழக்கம் தான் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

we-r-hiring

மழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ மருத்துவமனை மருந்துகள்!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எதிர்க்கட்சிகள் என்றாலே வெள்ளை அறிக்கை கேட்கத்தான் செய்வார்கள். வெள்ள நிவாரணத் தொகை ஒருவாரத்தில் கொடுக்கப்படும், முதலில் ஒருவாரம் டோக்கன் கொடுக்க வேண்டும். சில ரேஷன் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ரேஷன் கடைகளில் இருப்பில் வைக்கப்பட்டிருந்த சில பொருட்களும் சேதமடைந்துள்ளது.

சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்- விஜய் டிவி புகழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

இதை சரி செய்த பிறகு, நிவாரணத் தொகை ரேஷன் கடைகளில் வழங்கப்படும். திருப்புகழ் ஐ.ஏ.எஸ். கமிட்டியின் பரிந்துரைப்படியே வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று நாட்களில் வெள்ளம் வடிந்து, மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அடுத்தக்கட்ட நிதியை வழங்கும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ