
தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்குத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
“ராகுலுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்கியது ஏன்?”- கீழமை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
வேட்பு மனுவில் சொத்து விவரங்கள், வருமான விவரங்களை தேனி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் மறைத்ததாக மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது எனத் தீர்ப்பளித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மத்திய அமைச்சரவையின் செயலாளர் பதவிக்காலம் நீட்டிப்பு!
அத்துடன், மனுதாரர் தரப்பு மற்றும் எதிர்மனுதாரர் தரப்பு இரண்டு வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 4- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.