கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலை குறையாதுது ஏன்?- ப.சிதம்பரம்
374வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63-க்கும் டீசல் ரூ.94.24-க்கும் விற்கப்படுகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு அக்கறையுடன் செயல்படுகிறது என்று மாண்புமிகு நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்

இதை மக்கள் நம்ப வேண்டும் என்றால் அவர் இன்றைய (30-5-2023) டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் தலையங்கத்தைப் படித்து அதன்படி நடந்து கொள்ளலாமே? அந்த நாளிதழ் எதிர்க்கட்சிகளுக்குச் சொந்தமான நாளிதழ் இல்லையே… கச்சா எண்ணையின் விலை குறைந்த காலத்தில்கூட அரசு செயற்கையாகப் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி்வைத்திருப்பதை அத்தலையங்கம் சுட்டிக் காட்டியிருக்கிறது.

2014 முதல் 2021 வரை மற்றும் அக்டோபர் 2022 முதல் இன்று வரை கச்சா எண்ணையின் விலை குறைந்து இருந்த போதும் பெட்ரோல், டீசல் விலைகள் குறையவில்லை, ஏன்? காரணம்: பெட்ரோல், டீசல் மீது கடுமையான, பொருந்தாத வரி் மற்றும் செஸ் விதித்ததுதான் காரணம்.இதை நாங்கள் சொன்னால் நிதி அமைச்சருக்குக் கோபம் வருகிறதே, ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.