spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபண்ருட்டி அருகே பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல் - பங்கிற்கு சீல் வைத்து...

பண்ருட்டி அருகே பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல் – பங்கிற்கு சீல் வைத்து சிபிசிஐடி போலீசார் அதிரடி!

-

- Advertisement -

பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரில் பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கிய சம்பவத்தில் பங்கிற்கு சீல் வைத்து சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்,

we-r-hiring

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்த விவகாரத்தில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். முக்கிய குற்றவாளிகளான புதுச்சேரி மடுகரை மாதேஷ், கள்ளக்குறிச்சி பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா உள்பட 21 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைதான மாதேஷிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மாதேஷை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்த போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூர் பகுதியில் உள்ள இயங்காத பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கியதாகவும், பெட்ரோல் பங்கின் கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து நேரில் வந்து விசாரித்த சிபிசிஐடி போலீசார் பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

MUST READ