Homeசெய்திகள்தமிழ்நாடுபரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து - அரசின் மாற்று திட்டம் என்ன?

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து – அரசின் மாற்று திட்டம் என்ன?

-

- Advertisement -

விஜய் தலைமையிலான தவெக அரசு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்துள்ளது. இந்த முடிவின் காரணமாக மாநிலத்திற்கு சுமார் ரூ.50,000 கோடி மதிப்பிலான முதலீட்டு வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் எனவும், அதனுடன் தொடர்புடைய வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் சவால்கள் ஏற்படக்கூடும் எனவும் கவலைகள் எழுந்துள்ளன.பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து - அரசின் மாற்று திட்டம் என்ன?

தமிழ்நாட்டில் நீண்ட காலமாக விவாதத்திற்குள்ளாக இருந்து வந்த பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக விஜய் தலைமையிலான தவெக அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

சென்னைக்கு இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கும் நோக்கில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 3,700 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முந்தைய அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. ஆனால், தொடக்கம் முதலே இத்திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நில இழப்பு மற்றும் வாழ்வாதார பாதிப்பு குறித்து அவர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில், எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் இந்தத் திட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த விஜய் தலைமையிலான அரசு, தற்போது அதிகாரத்தில் அமர்ந்த பிறகு திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இந்த முடிவைத் தொடர்ந்து, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. பரந்தூர் விமான நிலையம் செயல்பாட்டிற்கு வந்திருந்தால், சுமார் ரூ.50,000 கோடி அளவிலான முதலீடுகள் மற்றும் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கும் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டம் நிறுத்தப்பட்டதால் அந்த வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதாகவும், இது நீண்ட காலத்தில் தமிழகத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், திட்டத்திற்காக ஏற்கனவே சுமார் 1,700 ஏக்கர் நிலங்கள் உரிமையாளர்களின் சம்மதத்துடன் அரசுக்கு வழங்கப்பட்டிருந்தன. இந்நிலைகள் இது தொடர்பான எதிர்காலம் தற்போது பெரிய கேள்வியாக உள்ளது. நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையை திருப்பிச் செலுத்தி நிலங்களை மீண்டும் பெறலாமா அல்லது அரசே அவற்றை வைத்துக்கொள்ளலாமா என்பது குறித்து நடைமுறை சிக்கல்கள் நிலவுகின்றன. இந்த நிலங்களை பயன்படுத்தி புதிய தொழிற்பூங்கா அல்லது SIPCOT போன்ற வளர்ச்சி திட்டங்களை உருவாக்கும் வாய்ப்புகள் குறித்து அரசு தற்போது பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ளதால், சென்னையில் அதிகரித்து வரும் விமான போக்குவரத்து தேவையை சமாளிக்க மாற்று வழிகள் என்ன என்பது முக்கிய கேள்வியாக மாறியுள்ளது. மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்குவது அல்லது புதிய மாற்றுத் திட்டங்களை உருவாக்குவது குறித்து அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டிய நிலை உள்ளது. மக்களின் வாழ்வாதார பாதுகாப்பை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட இந்த முடிவு ஒருபுறம் வரவேற்கப்பட்டாலும், மாநிலத்தின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்க அரசு என்ன மாற்றுத் திட்டங்களை முன்னெடுக்கப்போகிறது என்பது அனைவராலும் கவனிக்கப்படுகிறது.

கீழடி ஆய்வறிக்கை தெளிவற்றதா? – அமர்நாத் ராமகிருஷ்ணா விளக்கம்

MUST READ