Homeசெய்திகள்தமிழ்நாடு'கடலில் பேனா நினைவுச் சின்னம்'- முடிவைத் திரும்பப் பெறுகிறது அரசு?

‘கடலில் பேனா நினைவுச் சின்னம்’- முடிவைத் திரும்பப் பெறுகிறது அரசு?

-

 

15 நிபந்தனைகளுடன் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி!
File Photo

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“காமராஜர் தனது தாயாருக்கு மாதம் எவ்வளவு தொகை அனுப்புவார் தெரியுமா?”- நடிகர் சிவக்குமார் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

சென்னையில் உள்ள மெரினா கடலில் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பில் 134 அடி உயரத்திற்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி முதற்கட்டப் பணிகளும் நடைபெறுகின்றன. இந்த சூழலில் பேனா நினைவுச் சின்னம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என எதிர்ப்பு எழுந்தது. டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டிருந்தது.

ஆடி மாத திருவிழாவையொட்டி, ஆட்டுச் சந்தைகளில் வர்த்தகம் களைகட்டியது!

இதனால் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை தமிழக அரசுத் திரும்பப் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 7- ஆம் தேதி மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் திறக்கப்படவுள்ளது. கடலுக்கு பதில் நினைவிடத்திலேயே பேனா நினைவுச் சின்னம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

MUST READ