spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் - புதிய சின்னத்தில் களமிறங்கும் பாமக?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – புதிய சின்னத்தில் களமிறங்கும் பாமக?

-

- Advertisement -

ராமதாஸ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட முடியாத பாமக, புதிய சின்னத்தில் களமிறங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவருக்கு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 05ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விக்கிரவாண்டி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அங்கு திடீரென மயங்கி விழுந்த புகழேந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், ஏப்ரல் 06ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானது. இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற ஜூலை 10ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூலை 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

anbumani

இடைத்தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்சி வருகின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என நேற்று அறிவித்திருந்தார். இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தனது சொந்த சின்னமான மாம்பழம் சின்னத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்து பின்னடைவைச் சந்தித்ததால் மாம்பழச் சின்னம் பறிபோய்விட்டது. எனவே தேர்தல் ஆணையத்திடம் வேறு புதிய சின்னத்தை பெற்றே இடைத்தேர்தலில் போட்டியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

MUST READ