spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபோலீசாரை பார்த்து தப்பி ஓடிய இளைஞர். போலீசிடம் பிடிப்பட்ட கதை

போலீசாரை பார்த்து தப்பி ஓடிய இளைஞர். போலீசிடம் பிடிப்பட்ட கதை

-

- Advertisement -

திருவள்ளுர் அருகே இரவு வாகன சோதனையில் இருந்த போலீசாரை கண்டு இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிய இளைஞர் பிடிப்பட்டார். அந்த இளைஞர் ஏன், எதற்கு தப்பி ஓடினார் என்ற சுவராசியமான தகவல் வெளியாகியுள்ளது.

போலீசாரை பார்த்து தப்பி ஓடிய இளைஞர். போலீசிடம் பிடிப்பட்ட கதை
தங்கதுரை

திருவள்ளூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் வண்டியை கீழே போட்டுவிட்டு அருகில் உள்ள ஏரியில் மூழ்கி நீச்சல் அடித்து வெளியே வந்த போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். அவனை விசாரித்ததில் அவன் பிரபல இருசக்கர வாகன கொள்ளையன் என தெரியவந்தது.

we-r-hiring

திருவள்ளூர் அடுத்த சீத்தஞ்சேரியில் நேற்று முன் தினம் கூனிப்பாளையத்தை சேர்ந்த வீரமணிகண்டன் (வயது 25) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை சீத்தஞ்சேரி மதுபான கடை அருகே உள்ள பாஸ்ட் புட் கடைக்கு எதிரில் விட்டுவிட்டு உணவு வாங்கிவிட்டு வரும் போது தனது இருசக்கர வாகனம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனே அருகில் இருந்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

ஜான்சன் என்ற கில்பர்ட் கிரேஸ் ராஜ்
ஜான்சன் என்ற கில்பர்ட் கிரேஸ் ராஜ்

அது தொடர்பாக பென்னாலூர்பேட்டை காவல் நிலையத்தில் வீர மணிகண்டன் இருசக்கர வாகனம் திருடு போனது தொடர்பாக புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து பென்னாலூர் பேட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்தும் மற்றும் நள்ளிரவில் அவ்வழியாக வந்த அனைத்து வாகனங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சீத்தஞ்சேரி பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார்
சந்தேகம் படும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது அந்த நபரோ இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். பின்னர் சிறிது தூரம் போலீசார் அவரை துரத்திச் சென்றதால் மின்னல் வேகத்தில்
அருகே உள்ள ராமலிங்கபுரம் ஏரியில் குதித்து இரவில் மறைந்தார்.

சிறிது தூரம் போலீசார் அவரை துரத்திச் சென்றதால் மின்னல் வேகத்தில்
அருகே உள்ள ராமலிங்கபுரம் ஏரியில் குதித்து இரவில் மறைந்தார்.
விஷ்வா

நீச்சல் அடித்து மறுக்கறையை தாண்டி ஈரத்துணியுடன் அவ்வழியாக வந்த அவரை போலீசார் மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவனை போலீசார் தீவிரமாக விசாரித்ததில் அவன் நெய்வேலியை சேர்ந்த விஷ்வா வயது 19 என்றும் அவன் நண்பர்களுடன் இணைந்து இருசக்கர வாகனங்கள் திருடி வருவதாகவும் தெரியவந்தது.

சீத்தஞ்சேரி பகுதியில் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை தனது நண்பர் திருடியதாகவும் அதே பகுதியில் மற்றொரு வாகனங்களை திருடன் வேவு பார்த்த போது தான் போலீசாரை கண்டு தப்ப முயன்றதாகவும் அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அதைத் தொடர்ந்து சீத்தஞ்சேரி பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய ஜான்சன் என்ற கில்பர்ட் கிரேஸ் ராஜ் (19), தங்கதுரை (20) போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கூட்டாக சேர்ந்து திருவள்ளூர் மையப்பகுதி கச்சூர் மருத்துவமனை சித்தஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நான்கு இருசக்கர வாகனங்கள் திருடியதும் அதை குறைந்த விலைக்கு விற்பனை செய்து மூவரும் சேர்ந்து சொகுசான வாழ்க்கை வாழ திட்டமிட்டதும் போலீசார் விசாரணையில் வாக்குமூலம் அளித்தனர் .

அவர்களிடமிருந்து நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

MUST READ