spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுழந்தைகள் தினம் : ராமதாஸ் , அன்புமணி, டிடிவி தினகரன் வாழ்த்து..

குழந்தைகள் தினம் : ராமதாஸ் , அன்புமணி, டிடிவி தினகரன் வாழ்த்து..

-

- Advertisement -
நவம்பர் 14ம் தேதியான இன்று குழந்தைகள் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் :குழந்தைகளே தெய்வங்கள்…. அவர்களைக் கொண்டாடுவோம், மகிழ்ச்சியடைவோம்! உலகில் மகிழ்ச்சியை மட்டுமே வழங்கும் உயிர்கள் குழந்தைகள். அன்னையின் அன்புக்கும் எல்லை இருக்கலாம்…. ஆனால், குழந்தைகள் வழங்கும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அதனால் தான் எனது பார்வையில் குழந்தைகள் அனைவரும் தெய்வங்கள். என்னைச் சுற்றி குழந்தைகள் இருந்தால் எனக்கு கவலைகளே இருக்காது. மனித வாழ்க்கையில் எல்லாமுமாக இருக்கும் குழந்தைகளை இந்த நாளில் மட்டுமின்றி எந்நாளும் கொண்டாடுவோம், மகிழ்ச்சியடைவோம்!” என்று தெரிவித்துள்ளார்.

 பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் :மகிழ்ச்சியை வாரி வழங்கும் மழலைகளை இன்றும், என்றும் போற்றுவோம்! குழந்தைகளை எல்லையில்லாமல் நேசித்த ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. மடியிலிருந்து கறந்த பாலுக்கு இணையான தூய்மையான உள்ளங்களுக்கு சொந்தக்காரர்கள் குழந்தைகள். குழந்தைகளைக் கொஞ்சும்போது நமது கவலைகளை மறக்கச் செய்து, நம்மையும் குழந்தைகளாகவே மாற்றி விடுவது தான் அவர்களின் சிறப்பு. உண்மை தான்…. அதனால் நானே இப்போது அடிக்கடி குழந்தையாக மாறி விடுகிறேன். மகிழ்ச்சியை வாரி வழங்கும் குழந்தைகளை இன்றும், என்றும் போற்றுவோம்!

we-r-hiring

 அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் :குழந்தைகளே நாட்டின் எதிர்காலம் என பறைசாற்றி, அதற்கான செயல்திட்டங்களையும் வகுத்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்.

குழந்தைகளிடம் அன்புசெலுத்தி அரவணைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் கல்வி, முன்னேற்றம், பாதுகாப்பு, ஆகியவற்றையும் மேம்படுத்தி வருங்கால சமுதாயத்தின் சிற்பிகளாக குழந்தைகளை உருவாக்குவதற்கான உறுதிமொழியை அனைவரும் இந்நாளில் ஏற்போம்.” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ