
பொங்கல் பண்டிகையின்போது, பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்க 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
‘ஈரம்’ படத்தின் கூட்டணியில் உருவாகும் ‘சப்தம்’……. டப்பிங்கை தொடங்கிய ஆதி!
பொங்கல் பண்டிகையின் போது, தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. வரும் பொங்கல் பண்டிகையின் போதும், இந்த திட்டத்தைச் செயல்படுத்த நிதி ஒதுக்கி கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் இ.ஆ.ப., அரசாணை வெளியிட்டுள்ளார்.
லியோ ஷூட்டிங்கிற்கு ஃபுல் ஸ்டாப்….. லோகேஷ் கனகராஜின் ஸ்வீட் ட்வீட்!
1.68 கோடி சேலைகள், 1.63 கோடி வேட்டிகளை கொள்முதல் செய்வதற்கான பணியானை வழங்கப்பட்டுள்ளது. வேட்டி, சேலைகளைப் பயனாளிகள் பெறும் போது, அவர்கள் விரல் ரேகைப் பதிவு செய்வது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.