Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் பரிசு தயார்

பொங்கல் பரிசு தயார்

-

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. அதற்கு தமிழக அரசு சார்பில் பரிசு பொருட்களை வழங்கும் பணியில் வேகமாக இறங்கி உள்ளது.

மேலும், மக்களை மகிழ்விக்க அரசு சார்பில் என்னென்ன பொருட்களை கொடுக்கலாம் என்று அமைச்சரவை ஆலோசனை கூட்டங்களை நடத்தி தற்போது தொகுப்புகளையும் அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பரிசு தொகுப்புகளுடன் இலவச வேட்டி சேலைகளை வழங்க ஆடை தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
15 டிசைன்களில் பல வண்ணங்களில் சேலைகள், 5 டிசைன்களில் வேட்டியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக 243.96 கோடி ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொங்கல் பண்டிகைக்காக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலை உற்பத்தி செய்யும் பணி ஈரோட்டில் 60 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது.

மேலும், பொங்கலின் பரிசு தொகுப்பாக 1000 ரூபாய் கொடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திறந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புகளுடன் கரும்புகளையும் வழங்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பரிசு தொகுப்புகளுடன் ஒருமுழு கரும்பினை வழங்கிட உத்தரவிட்டார் முதல்வர் மு. க. ஸ்டாலின்.

பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்குவதற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
ஜனவரி 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை டோக்கன் வழங்கும் பணி நடைபெறுகிறது. 9 ஆம் தேதி பரிசு பொருட்கள், வேட்டி சேலைகளையும் ரேஷன் கடைகளில் வழங்க உள்ளது.

MUST READ