Homeசெய்திகள்தமிழ்நாடு"கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு" - பிரேமலதா விஜயகாந்த்

“கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு” – பிரேமலதா விஜயகாந்த்

-

“கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு” – பிரேமலதா விஜயகாந்த்

காவிரி நதிநீரை திறந்து விடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இதனை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

Image

தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “நதிநீர் பிரச்சினைக்கு நதிகளை இணைப்பதுதான் ஒரே தீர்வு. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருப்பதால் கூட்டணி குறித்து இப்போது கூற முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை.

அதிமுக- பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டு 2 நாட்கள்தான் ஆகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது நிரந்தரமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதிமுக- பாஜக விவகாரம் இரு கட்சிகள் இடையேயான பிரச்சனை” என்றார்.

 

MUST READ