spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஓய்வு பெறுவோரை மீண்டும் பணியமர்த்தும் முறையை கைவிட வலியுறுத்தி போராட்டம்

ஓய்வு பெறுவோரை மீண்டும் பணியமர்த்தும் முறையை கைவிட வலியுறுத்தி போராட்டம்

-

- Advertisement -

உயர் சிறப்பு மருத்துவமனைகளில் இயக்குனர்களாக இருந்து ஓய்வு பெறுவோரை மீண்டும் அதே பதவிக்கு பணியமர்த்தும் முறையை கைவிட வலியுறுத்தி, ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓய்வு பெறுவோரை மீண்டும் பணியமர்த்தும் முறையை கைவிட வலியுறுத்தி போராட்டம்

we-r-hiring

ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையிலான இப்போராட்டம், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரக வளாகத்தில் நடைபெற்றது.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் உயர் சிகிச்சை மருத்துவமனையில் இயக்குனராக இருந்த பார்த்தசாரதி ஓய்வு பெற்ற பின்பும் மீண்டும் இயக்குனராக பணி வழங்கப்பட்டுள்ளதற்கு, ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதே போல், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இயக்குனராக உள்ள மருத்துவர் விமலா ஓய்வு பெற்ற பின்பும் மீண்டும் ஐந்து ஆண்டுகளாக அதே பதவியில் நீடித்து வருவதற்கும் ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.

எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை (apcnewstamil.com)

ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அதே உயர் பதவியில் நீடிக்கச் செய்வதால் மூத்த மருத்துவர்களுக்கு உரிய பதவிகள் கிடைக்கப்பதற்கான வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டினர். திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பணி நிரவல் மற்றும் பணியிட மாற்றங்கள் வெளிப்படைத் தன்மையோடு நடைபெற்று வரும் நிலையில், ஓய்வு பெற்ற இயக்குனர்கள், மீண்டும் அதே பணிக்கு வாய்ப்பைப் பெறுவது, அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ள மருத்துவர்கள், மறுபணி அமர்த்துவதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆவடி வேல்டெக் நிறுவனர் சகுந்தலா ரங்கராஜன் காலமானார் (apcnewstamil.com)

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளின் தலையீட்டினாலேயே இந்த களையப்பட வேண்டிய அவலம் நிலவுவதாக அரசு மருத்துவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

MUST READ