காதலா் தின கொண்டாட்டங்கள் இன்று களைக்கட்டும் நிலையில் இந்தியாவில் சில அமைப்புகள் அதற்கு தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
உலகம் முழுவதும் காதலா் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தினமும் காதலை வளா்த்தாலும் காதலா் தினத்தை தங்களது ‘ஸ்பெஷல்’ தினமாகவே காதலா்கள் கருதுகிறாா்கள். இந்நிலையில் இந்தியாவில் சில அமைப்புகள் காதலா் தினத்திற்கு தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
அந்த வகையில் காதலர் தினமான இன்று (பிப். 14) காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாட்டில் இந்து முன்னணியினர் ஆடு மற்றும் நாய்க்கு திருமணம் செய்து வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருப்பூர், கோபிசெட்டிபாளையம் (ஈரோடு) போன்ற இடங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில், புரோகிதர் மந்திரங்கள் ஓத, ஆட்டுக்கும் நாய்க்கும் மாலை அணிவித்து, ஊா்வலமாக அழைத்து சென்று, சீர்வரிசைப் பொருட்களுடன் திருமணம் நடத்தி, காதலர் தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனா். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காதலா் தினம் கலாச்சார சீரழிவை உருவாக்குவதாகவும், அதற்கு எதிா்ப்பு தெரிவிக்கவே இப்படி செய்வதாகவும் இந்து முன்னணியினர் கூறுகின்றனா்.
திமுக வடக்கு மண்டல பயிற்சி மாநாடு… பங்கேற்பதற்காக முதல்வர் புறப்பட்டார்…


