
சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீர் விரைவில் வடிந்துவிடும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

நண்பர்களை நம்பிச்சென்ற மாணவி பலாத்காரம்.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி..
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மழைநீர் தேங்கிய பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு, தண்ணீரை வெளியேற்றும் பணிகளைத் துரிதப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன், “சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீர் விரைவில் வடிந்துவிடும். மழை பெய்யும் போது, தண்ணீர் நிற்பது உண்மை; ஆனால் அவை உடனுக்குடன் வடிகிறது. சென்னையில் மழைநீர் அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகின்றன.
ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 40 குறைந்தது!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரக்கூடிய தண்ணீர் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அம்பத்தூர், கொளத்தூர், தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் தேங்கிய நீரை அகற்றும் பணி நடக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை குறைக்கக் கோரிக்கை வைத்திருக்கிறோம். செம்பரம்பாக்கம் நீர்த்திறப்பு குறைந்தால் அடையாறு கரையோர பகுதிகளில் வெள்ளம் வடியும்” எனத் தெரிவித்துள்ளார்.