spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்திய அறிவியலாளர்களின் சாதனை ஈடு இணையற்றது - ராமதாஸ் வாழ்த்து

இந்திய அறிவியலாளர்களின் சாதனை ஈடு இணையற்றது – ராமதாஸ் வாழ்த்து

-

- Advertisement -

குறைகேட்க வராதது ஏன்? எனக் கேட்ட அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைகள் தொடர வாழ்த்துகிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து கடந்த செப்டம்பர் 2-ஆம் நாள் பி.எஸ்.எல்.வி ஏவுகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் 125 நாள் பயணத்திற்குப் பிறகு, பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள எல் 1 புள்ளியை அடைந்து ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல். இதற்கு காரணமான இஸ்ரோ அமைப்புக்கும், அதன் விஞ்ஞானிகளுக்கும் எனத் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்திரயான் திட்டத்தின் மூலம் நிலவை வென்ற நமது அறிவியலாளர்கள் இப்போது ஆதித்யா எல் 1 திட்டத்தின் மூலம் சூரியனை நெருங்கியுள்ளனர். சூரியன் குறித்த உண்மைகளும் இனி நமக்கு புலப்படும். வானத்தையும், நிலவையும் வசப்படுத்திய நாம், இனி சூரியனையும் சொந்தமாக்கிக் கொள்வோம். இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைகள் தொடர மீண்டும் வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ