spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ஆன்மீக விழா அல்ல, அரசியல் விழா"- ராமர் கோயில் திறப்பு குறித்து டி.ஆர்.பாலு எம்.பி. விமர்சனம்!

“ஆன்மீக விழா அல்ல, அரசியல் விழா”- ராமர் கோயில் திறப்பு குறித்து டி.ஆர்.பாலு எம்.பி. விமர்சனம்!

-

- Advertisement -

 

"விரைந்து நிவாரணம் தர வலியுறுத்தினோம்"- மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்த பின் டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி!

we-r-hiring

அயோத்தி ராமர் கோயில் திறப்பு ஆன்மீக விழா அல்ல, அரசியல் விழா என்று தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. விமர்சித்துள்ளார்.

அயலான் ஸ்டைலில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்

“பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை மறைப்பதற்காக, மக்கள் கவனத்தைத் திசைத் திருப்புவதற்காகவும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதை பா.ஜ.க. தனது சாதனையாகப் பட்டியலிட்டுள்ளது. இதன் மூலம் பா.ஜ.க. தனது தோல்வியை மறைக்க நினைக்கிறது.

மழை, புயல் காலங்களில் தர வேண்டிய நிவாரணங்களைத் தராமல் வஞ்சிக்கும் அநீதி நடக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் முழுமையாகக் கட்டி முடிக்காத ராமர் கோயிலைக் காட்டி பா.ஜ.க. வாணவேடிக்கை காட்ட முயல்கிறது. மக்கள் நம்பிக்கையில் அரசியல் செய்வது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

லால் சலாம் படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு

மகாராஷ்டிராவுக்கான கால்கோல் விழாவைப் போல், ஒரு கோயில் விழாவைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது” என்று தி.மு.க.வின் பொருளாளரும், கட்சியின் மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார்.

MUST READ