Homeசெய்திகள்தமிழ்நாடு"போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள்"- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!

“போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள்”- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!

-

 

"போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள்"- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இரண்டாவது நாளாக இன்று (டிச.24) தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

ஜெயிலரைத் தொடர்ந்து நெல்சனின் அடுத்த படம்…. அவரே கொடுத்த அப்டேட்!

அந்த வகையில், நெல்லை மாவட்டம், சீவலப்பேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிநீர் விநியோக குழாய்களை நேரில் பார்வையிட்டு ஆய்வுச் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., “கனமழை காரணமாக 150 இடங்களில் பல்வேறு குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 175 இடங்களில் முக்கிய சாலைகள், பாலங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் ஆய்வு சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

நாகூர் தர்கா விழா…. ஆட்டோவில் வந்து கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

வடக்கு வண்ணாரப்பேட்டை பைபாஸ் பாலம், கருப்பன் துறையிலும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. ஆய்வுச் செய்ய உள்ளார்.

இதனிடையே, சீவலப்பேரி பகுதியில் ஏற்பட்ட குழாய் உடைப்பினை கேரள அதிகாரிகள் ஆய்வுச் செய்தனர். தமிழக அதிகாரிகளுடன் இணைந்து கேரளா அதிகாரிகளும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

MUST READ