தங்க நகை கடன் தொடர்பாக 9 புதிய விதிமுறைகளை இந்திய ரிவர்வ் வங்கி அறிவித்திருந்திருந்த நிலையில் தற்போது தங்க நகைக்களுக்கான கட்டுபாடுகளை தளர்த்த ரிவர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு பரிந்துரை செய்துள்ளது.
நகைக்கடன் நிறுவனங்கள், பொதுமக்களின் கருத்துக்கள் அடிப்படையில் நகைக் கடன்களுக்கான 9 புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் தனிநபர்களுக்கான தங்க நகைக் கடன் வழங்குவது தொடர்பான 9 புதிய விதிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை அறிவித்திருந்தது. அடகு வைக்கும் தங்க நகையின் மதிப்பில் 75% தொகை மட்டுமே கடனாக வழங்கப்படும் எனவும், நகைகளுக்கான உரிமை ஆவணங்களை கடன் பெறுவோர் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், தங்கத்திற்கான தூய்மை சான்றிதழை வழங்க வேண்டும், அதே போன்று நகைகளின் தரம் கட்டாயம் 22 கேரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் அதில் அடக்கம்.

இந்நிலையில், நகைக் கடன் வழங்க விதிக்கப்பட்ட 9 நிபந்தனைகளுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள இந்த 9 கட்டுப்பாடுகளால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளனர். எனவே நகைக்கடன் கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்மலா சீதாராமுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் எதிரொலியாக நகைக் கடன்களுக்கான விதிமுறைகளை, நகைக்கடன் நிறுவனங்கள், பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு பரிந்துரை செய்துள்ளது.
சிறிய தொகைக்கு நகைக்கடன் பெறுவோர் பாதிக்கப்படாதவாறு, புதிய விதிமுறைகளில் சில பரிந்துரைகளையும் ரிசர்வ் வங்கிக்கு வழங்கியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி ரூ.2 லட்சத்துக்கும் குறைவான நகைக்கடன் பெறுவோர், இந்த புதிய விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி இதனை பரிசீலிப்பதாகவும் அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்ப பெற மாவட்டத் தலைவர் வலியுறுத்தல்…


