spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநிவாரணத் தொகை இருமடங்காக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

நிவாரணத் தொகை இருமடங்காக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

-

- Advertisement -

 

"நீட் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: CM MKStalin

மனித- வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான நிவாரணத் தொகை ரூபாய் 5 லட்சம் என்பது ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

வெற்றி நடை போடும் சிவகார்த்திகேயனின் அயலான்….. ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய நிறுவனம்?

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மனித வனவிலங்கு மோதல்களை குறைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் மனித-வனவிலங்கு மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு, கடந்த 2021- ஆம் ஆண்டு நவம்பர் 03- ஆம் தேதி அன்று வெளியிட்ட அரசாணையின்படி இத்தகைய மோதல்களில் மனித உயிர் இழப்பு அல்லது நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூபாய் 4 லட்சத்தில் இருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த இழப்பீடு கோரிக்கைகளை உடனடியாக வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிறும நிதி (Corpus Fund) ஏற்படுத்தியுள்ளது.

கமல் – பிக்பாஸ் மாயா குறித்த சர்ச்சை பேச்சு…. மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட புகழ், குரேஷி!

இந்நிலையில், மனித-வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கூடுதல் நிவாரண உதவித் தொகை வழங்கிட வேண்டுமென அரசுக்கு முறையீடுகள் வந்துள்ளன. முதலமைச்சர் இந்த முறையீடுகளை மிகுந்த பரிவுடன் பரிசீலனை செய்து இத்தகைய நிகழ்வுகளில் பாதிக்கப்படும் குடும்பங்களின் சிரமங்களைக் களைவதற்காக, மனித உயிர் இழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூபாய் 5 லட்சம் என்பதை ரூபாய் 10 லட்சமாக இரு மடங்கு உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள். இது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.” இவ்வாறு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ