Homeசெய்திகள்தமிழ்நாடுபொத்தேரியில் நடந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்

பொத்தேரியில் நடந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்

-

பொத்தேரியில் நடந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம்‌, மறைமலைநகர்‌ காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பாக்கம்‌ ரயில்வே சாலை சந்திப்பு எதிரில்‌ இன்று (1-8-2023) காலை சென்னை நோக்கி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மூன்று இருசக்கர வாகனங்களின்‌ மீது எதிர்பாராதவிதமாக மோதியதால்‌ ஏற்பட்ட விபத்தில்‌ நான்கு பேர்‌ உயிரிழந்தனர்‌ என்ற துயரமான செய்தியினைக்‌ கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்‌.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை விபத்து நடந்த இடத்திற்குச்‌ சென்று தேவையான மீட்பு நடவடிக்கைகளையும்‌, மருத்துவ உதவிகளையும்‌ விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொண்டேன்‌. மேலும்‌, இவ்விபத்தில்‌ காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்றுவரும்‌ திருபார்த்தசாரதி என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவறுத்தியுள்ளேன்‌.

மூன்று நாள் பயணமாக இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: CM MKStalin

இவ்விபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கும்‌ அவர்களது உறவினர்களுக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, ஆறுதலையும்‌ தெரிவித்துக்‌ கொள்வதோடு உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம்‌ ரூபாயும்‌, மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று வரும்‌ திரு. பார்த்தசாரதி அவர்களுக்கு ஐம்பதாயிரம்‌ ரூபாயும்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கடவும் உத்தரவிட்டுள்ளேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ