Homeசெய்திகள்தமிழ்நாடுமேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

-

- Advertisement -

 

"அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்!"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
Photo: DMK

திருப்பூரில் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-இன்ஃபண்ட் ஜீசஸ் நர்சரி பிரைமரி பள்ளி இணைந்து நடத்திய-வளரும் விஞ்ஞானிகளின் அறிவியல் கண்காட்சி

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கொழுமம் கிராமம் கொழுமம், பழனி முதன்மைச் சாலையிலுள்ள சாவடியின் முகப்பு மேற்கூரை இன்று (அக்.16) காலை எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்ததில் முரளி ராஜா (வயது 35), கௌதம் (வயது 29) மற்றும் திருமணிகண்டன் (வயது 28) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து, அவர்களை உடுமலைப்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

தொழிற்சாலை ஊழியர்களுக்கு சாலை விழிப்புணர்வு-ஆய்வாளர் ஜெயக்குமார்

உயிரிழந்த மூவரையும் இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது ஆழ்ந்த குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ