Homeசெய்திகள்தமிழ்நாடுரூபாய் 4 கோடி பறிமுதல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்!

ரூபாய் 4 கோடி பறிமுதல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்!

-

 

ரூபாய் 4 கோடி பறிமுதல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்!

ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் வாக்களித்த கேஜிஎஃப் யாஷ்… முண்டியடித்த ரசிகர்கள்…

கடந்த ஏப்ரல் 06- ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த நெல்லை விரைவு ரயிலில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி எடுத்துச் சென்ற ரூபாய் 4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 4 கோடி ரொக்கம் பறிமுதல் தொடர்பாக, நெல்லை தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் ஜெய்சங்கர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியிருந்தனர். விசாரணையில் அவர்கள் அளித்த தகவலின் பேரில், நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் காவல்துறையினர் இரண்டாவது முறையாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த நயினார் நாகேந்திரன், “பணம் என்னுடையது இல்லை” என கூறியுள்ளார்.

காஜல் அகர்வால் நடிப்பில் சத்யபாமா… முதல் பாடல் ரிலீஸ்…

இந்த சூழலில், தாம்பரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ரூபாய் 4 கோடி பணம் பறிமுதல் வழக்கின் விவரங்களை தாம்பரம் காவல்துறையினர், சி.பி.சி.ஐ.டி.க்கு நாளை (ஏப்ரல் 27) வழங்கவுள்ளனர்.

MUST READ