Homeசெய்திகள்தமிழ்நாடுரூபாய் 6,000 பெற 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்!

ரூபாய் 6,000 பெற 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்!

-

- Advertisement -

 

"செந்தில் பாலாஜி துறையில்லா அமைச்சராகத் தொடர்வார்"- தமிழக அரசின் இணையதளத்தில் தகவல் வெளியீடு!
Photo: TN Govt

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் ரூபாய் 6,000 நிவாரணம் வேண்டி விண்ணப்பித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து தானியங்கி சமிக்ஞைகள்

‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை முழுவதும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த சூழலில், கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு தலா ரூபாய் 6,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அத்துடன், சென்னை முழுவதும் உள்ள ரேஷன் கார்டுகளை நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும், ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

அத்துடன், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட வட்டங்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சாலையில் கொப்பளித்து ஓடிக்கொண்டிருக்கும் கழிவு நீர் கால்வாய் – பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் ரூபாய் 6,000 நிவாரணம் பெற விண்ணப்பித்துள்ளனர். டிச.17- ஆம் தேதி ரேஷன் கடைகள் மூலம் 5.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் 4.90 லட்சம் பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29,000 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 22,000 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14,000 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

MUST READ