திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவிற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தி MLA அவர்கள் உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார் தற்போது சிகிச்சை பலனின்றி மறைந்தார். 1973 :கிளை கழக செயலாளர் 1980–1986:மாவட்ட பிரதிநிதி, 1986: பொதுக்குழு உறுப்பினர் ,ஊராட்சி மன்ற தலைவர் .1990 ஒன்றிய பொறுப்பாளர் , 1992–1997: ஒன்றிய செயலாளர் (இரண்டுமுறை) 1996: கோலியனுார் ஒன்றிய பெருந்தலைவர் , 1997: தலைமை செயற்குழு உறுப்பினர் 2009: ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்ட பொருளாளர் . 2015: விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் . 2019.விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
2021. அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக சிறப்பாக பணியாற்றிய நா. புகழேந்தி அவர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், @mkstalin மாண்புமிகு கழக துணைப் பொதுச் செயலாளர் முனைவர் க பொன்முடி @KPonmudiMLA ஆகியோர் மீது தீராத பற்று கொண்டு கழகத்தின் பல்வேறு சோதனை காலங்களில் போராட்டம், சிறை என தனது வாழ்க்கையை கழகத்திற்காக அர்பணித்தார் . தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி, மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் க பொன்முடி அவர்களின் வழிக்காட்டுதலின் படி பல்வேறு மக்கள் பணிகளை சிறப்பாக பணியாற்றி வந்த நா. புகழேந்தி அவர்கள் மறைந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.