spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆர்.எஸ்.எஸ். பேரணி- தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஆர்.எஸ்.எஸ். பேரணி- தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

 

இஸ்லாமிய அமைப்புகளின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!
File Photo

ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி வழங்க பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!

ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பாக அந்த அமைப்பு தொடர்ந்த வழக்கு இன்று (நவ.06) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஆர்.எஸ்.எஸ். கேட்டுள்ள தேதிகளில் வேறு சில மத கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இரண்டு தேதிகளில் ஏதேனும் ஒரு தேதியில் பேரணி நடத்த அனுமதிக்கப்படும்” என்று வாதிட்டார்.

காரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல்

இதையடுத்து நீதிபதிகள், வரும் நவம்பர் 19- ஆம் தேதி (அல்லது) நவம்பர் 26- ஆம் தேதி ஆகிய நாட்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். பேரணி செல்லும் பாதை குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறி, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு நவம்பர் 15- ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

MUST READ