
சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார்!
தனிப்படைக் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், கே.கே.நகர்- ஆற்காடு சாலையில் நின்றுக் கொண்டிருந்த சிவப்பு நிற மாருதி காரை காவலர்கள் சோதனை செய்தனர். இதில், கணக்கில் வராத சுமார் ஒரு கோடி ரூபாய் ரொக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் 4ஆவது நாளாக வருமான வரி சோதனை!
இது குறித்து வாகனத்தில் வந்த இலங்கை தமிழர் கமலநாதன் மற்றும் மடிப்பாக்கம் வெங்கடகிருஷ்ணன், மயிலாடுதுறை கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி கார்த்திகேயன் ஆகிய நான்கு பேரையும் தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து, விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் வைத்திருந்த பணத்திற்கான ஆதாரம் எதுவும் இல்லாததால், காரில் இருந்த பணத்தைப் பறிமுதல் செய்தனர்.